வல்வையிலுள்ள இளம் சந்ததியினருக்கு, எம்மிடமிருந்து சில கருத்து பரிமாற்றம்.
"வளரும் / விளையும் பயிரை முளையில் தெரியும்" "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" என பழமொழிகள் நாம் கேட்டிருக்கிறோம்.
வல்வையில் தற்கால சூழ்நிலையில் இது எப்படி என்பதை ஆராயும் தொடராகவே இதை ஆரம்பிக்கிறோம்.
அடிமட்டத்திலுள்ள பிரச்னையை (Fundamental Issues) புரிந்து கொண்டால்தான் அதற்குரிய சீர்திருத்தத்தை சரியான முறையில் கையாளுவதன் மூலமே நாம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை வல்வையில் உருவாக்கலாம்.
விஞ்ஞான கணிப்பின்படி ஒருவர் பிற்காலத்தில்வெற்றியுடன் ஒரு முழுமையான மனிதனாக முதிர்ச்சியடைவார் என்பதற்குரிய அறிவு உள்வாங்குதல் அவர் பிறப்பிலிருந்து 5 ஆவது வயதிற்குள் 20% (வீதமும்), 5 இலிருந்து 12 வயதிற்குள் 20% (வீதமும்), மிகுதி 60% (வீதமும்) எஞ்சிய வாழ்கைக் காலத்திலும் நிர்ணயிக்கப்படுகிறது.
முழுமையான மனிதன் என்று நாம் சொல்லும்போது, அது ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து வாழ்கையில் அன்பு, பண்பு, பாசம், நேசம், கருணை போன்ற குணாதிசியங்களுடன் சீரிய கட்டுப்பாடு, நேர்த்தியான சிந்தனை, வாக்குத்தவறாமை போன்ற அணுகுமுறைகளுடன் விடாமுயற்சி, கடினஉழைப்பு, மற்றவர்களிடம் தங்காது சொந்தக்காலில் நின்று வெற்றியை தழுவிக்கொள்ளும் மனப்பான்மையுடன் ஒரு முழுமையான மனிதனாக நிறைவு பெறுவதே.
அறிவு உள்வாங்குதல் என்பது அவர் பிறப்பிலிருந்து 5 ஆவது வயதிற்குள் பெற்றோர்களாலும், 5 இலிருந்து 12 வயதிற்குள் பெற்றோர்கள், ஆரம்பப்படசாலை, சுற்றாடல் போன்றவற்றாலும் தூண்டப்படுகின்றன (Influence).
வல்வையில் ஏறத்தாள 70 பிள்ளைகள் ஒவ்வொரு வருடமும் பிறக்கிறார்கள், இப்பிள்ளைகளின் பெற்றோர்களால் பிறப்பிலிருந்து 5 ஆவது வயதிற்குள் அந்தப்பிள்ளைகளிற்கு முழுமையான அன்பு அறிவு பாசம் கருணை போன்ற உள்வாங்குதல்கள் ஊட்டப்படுகிறதா? அதற்குரிய சூழ்நிலைகள் பெற்றோர்களுக்குள்ளதா?
5 இலிருந்து 12 வயதிற்குள், தாய் தந்தையர் இருவரும் தொடர்ச்சியாக பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கிறர்களா? ஆரம்ப பாடசாலை நடத்துபவர்கள் போதிய அறிவுடனும், முன்னோடியான சிந்தனையுடனும் செயற்பட்டு சிறார்களுக்கு சரியான அறிவு உள்வாங்குதலுக்குரிய சூழ்நிலையை அளிக்கிறார்களா? வல்வையிலுள்ள இளைஞர்களும் முதியவர்களும் முன்னோடியாக செயற்பட்டு, சிறார்கள் பார்த்து வளரக்கூடிய முன்மாதிரியானவர்களாக (Role Model) செயற்படுகிறார்களா? இப்படி கேள்விகளை எழுப்பி பார்த்தால் தான் எமது சமுதாயம் எங்கே நிற்கிறது என்று புரியும்.
வல்வை என்கிற எமது கட்டுக்கோப்பான சமுதாயத்தை யார்யாரோ திட்டமிட்டே சிதைத்து கொண்டிருக்கிறார்கள், அதற்கு நாமும் தெரியாமலோ புரியாமலோ உடந்தையாகிக் கொண்டிருக்கிறோம். தாயை விற்கமுடியுமா? அதே மாதிரி தாய்மண்ணாம் வல்வையை விற்க முடியுமா? இளம்சமுதாயத்தினரும், இடைசமுதாயத்தினரும், முதிர்ந்தசமுதாயத்தினரும் விழித்தெழ வேண்டும்.
எங்களின் தனிப்பட்ட சிந்தனையையும் செயற்படுகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு வல்வையை மீளக் கட்டிஎழுப்ப முன்வந்தால்தான் நாம் இதை சாதிக்க முடியும்.
வயது |
தற்காலகட்ட சிந்தனையும் செயற்பாடும் |
பிறப்பிலிருந்து 5 ஆவது வயது |
எல்லா பிள்ளைகளுக்கும் சரியான வளரும் சூழ்நிலை கொடுக்கப்படவேண்டும். |
5 இலிருந்து 12 ஆவது வயது |
இந்த சிறுவர்கள் பார்த்து வளர்வதற்கு வல்வையில் உள்ள இளைஞர்களும் பெரியோர்களும் முன்மாதிரியானவர்களாக நடக்கவேண்டும். |
12 இலிருந்து 18 ஆவது வயது |
இவர்கள் தாமாகவே படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்தி பரீட்சைகளில் நல்ல சித்தியடையவேண்டும். Tution என்பது ஒரு தற்காலிகமானது Self Study யே முழு பயன் தரும். |
18 இலிருந்து 24 ஆவது வயது |
இவர்கள் செயல்முறைசாராக் கல்வி அல்லது தொழில்முறைக் கல்வியில் ஒருமுகப்படுத்தி முழுக்கவனத்தையும் ஒருதிசையில் செலுத்தி அதன் விளைவாக சொந்தக்காலில் நிற்கும் வேலையை தேடிக்கொள்ளவேண்டும். இவர்கள் நேர்ப்போக்கான சிந்தனையாளர்களாக இருந்தால் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். |
24 இலிருந்து 40 ஆவது வயது |
இவர்கள் சொந்தக்காலில் நிற்கும் வேலையும், திருமணம் செய்து பிள்ளைகள் பிறந்தபின் மனைவி பிள்ளைகளுடன் பிள்ளைகள் வயதிற்கு வரும் மட்டும் அவர்களுடன் போதியளவு நேரம் செலவழிக்கவேண்டும். இவர்கள நேர்ப்போக்கான சிந்தனையாளர்களாக இருந்தால் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். |
40 இலிருந்து 50 ஆவது வயது |
இவர்கள் Middle Age என்கிற காலகட்டத்திற்குள் இருப்பவர்கள் இவர்கள் நினைத்தால், அவர்களில் வாழ்கை நிலைமைகள் வழிவிட்டால் சமுதாயத்தின் முன்னோடிகளாக திகழலாம். |
50 இலிருந்து 75 ஆவது வயது |
இவர்கள் போராட்டத்தின் முன்பே முதிர்ச்சியடைந்தவர்கள். பொதுவில் மாற்றங்களை விரும்பாதவர்கள் (Conservative). ஒரு சிலர் சொந்த அரசியலிற்காக இளம் சந்ததியினரை பாவிக்க முனைபவர்கள். இவர்களின் சிந்தனைப்போக்குகளும், செயற்பாடுகளும் நவீன உலகத்துக்கான புதிய சிந்தனைகளாக மாற்றப்படவேண்டும். இவர்கள் இளம் சந்ததியினரின் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் போதியளவு இடம் கொடுத்து, இளம் சந்ததியினருக்கு முன்னோடிகளாக திகழ வேண்டும். மாற்றாக இளம் சந்ததியினரை தமது உள்ளூர் அரசியலிற்காக கையாளுவதை தவிர்க்க வேண்டும். |
75 வயதிக்கு மேற்பட்டவர்கள் |
இவர்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உதவிகளும் இளம் சந்ததியினர் வழங்கவேண்டும். |
நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் இதை சாதிக்க முடியும். இதில் யார் பெரியவர், யார் சொல்வதை யார் கேட்டபது என்கிற தர்க்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எமது வளரும் சமுதாயாதிற்கு வழிகாட்டியாக நாம் மாறவேண்டும்.
எனது எழுத்துகளில் பிழைகளிருப்பின் அறியத்தந்தால் அதை திருத்தியமைக்கலாம்.
அன்புடன் முகுந்தன் அண்ணா
அன்புடன் முகுந்தன் அண்ணா
(vdag01@gmail.com / uk 07766408004 / facebook: Valvai Valvettithurai)