பொருளாதார அபிவிருத்தித்திட்டம் 1
வல்வைக்கு இருக்கும் சிறந்த இயற்கை வளம் கடல் தான். எமக்குள்ள இந்த இயற்கையான கடல் வளத்தைகொண்டு நாம் எப்படி அதிகப்படியான நன்மைகளை பெறலாம் என்று சிந்தித்து பார்த்த பொழுது உருவாகியதே வல்வையின் மீன்பிடித்துறைமுகம்.
சாத்தியமான, நடைமுறைப்படுத்தக்கூடிய மற்றும் செய்து முடிக்கக்கூடிய திட்டம் என்பதை துறைசார் வல்லுனர்களுடனும், தனித்துறை நிபுணர்களுடனும் கலந்து ஆழ்ந்த ஆலோசனைகளின் பின்புதான் இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
கீழே இணைக்கப்பட்டிருக்கும் படம் முதற்கட்டமான சிந்தனையின் வெளிப்பாடு. இத்திட்டத்தினுள் பலவகையான சிறு திட்டங்கள் அடங்கியுள்ளன. அவற்றை சிறிதுசிறிதாக காலம் வரும்போது வெளிப்படுத்துவோம்.
இத்திட்டம் முதல் கட்டத்திலிருந்து இறுதி கட்டம் வரையும் வல்வையின் இளம்சமுதாயம் தொழில் பழகும் பயிற்சிக்கு உள்படுதப்பட்டு, தொழில் பயிற்றப்பட்ட இளம்சமுதாயமே அதை கட்டிமுடிப்பதிலும். கட்டியபின் துறைமுக நிர்வாகமும், துறைமுக வணிக மேலாண்மையையும் தொடர்ந்து கையாளுவதிலும் முழுமையாக முன்னிற்கும்.
This is a service providing business.

இதிட்டதிற்கு நாம் பெயர் வைக்கவேண்டும் என்று யோசித்தபொழுது எம் கண்முன்னே தெரிந்தது எம்மையெல்லாம் அரவணைக்கும் தாய் முத்துமாரியம்மன் தான். இயற்கையாகவே முத்துமாரியின் அரவணைக்கும் கைகளை போலவே வல்வை மீன் பிடித்துறைமுகத்தின் வடிவமும் அமைந்தது. இதனால் இத்திட்டத்திற்கு "அன்னையின் அரவணப்பில்" எனும் பெயரையிட்டோம்.

இத்திட்டம் வல்வையின் இயற்கை வளத்தை முன்வைத்து எவ்வளவு முழுமையாக போடமுடியுமோ இயன்ற வரையில் மிகஉயர்வாக போடப்பட்டுள்ளது.
இத்திட்டதிற்கு இலங்கை மீன்பிடி திணைக்களத்தினது உதவியும், வல்வை நகரசபையின் உதவியும், புலம்பெயர் மற்றும் தாய்நில வல்வை மக்களின் அனுசரணையும் மிகையாக தேவை.
இதற்குமேல் செய்து முடிப்போம் என்னும் நம்பிக்கை தேவை