அந்தியட்டி அழைப்பு - திரு தங்கவேல் சண்முகவடிவேல் (குட்டிமணி)

theiva

மலர்வு 02/03/1957                உதிர்வு 30/09/2013

கடந்த 30.10.2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்ப விளக்கு, அமரர். தங்கவேல் சண்முகவடிவேல் அவர்களின் அந்தியட்டிக் கிரிகைகள் 29.10.2013 (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெறும். நண்பகல் 12.00 மணியளவில் இடம் பெறும் சபிண்டீகரணக் கிரிகைகளிலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் கலந்து பொண்டு அன்னாரது ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தி;ககுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.அதனைத் தொடர்ந்து எமது இல்லத்தில் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரது இறுதி நிகழ்வில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தொலைபேசி மூலமும்,கடிதங்கள் மூலமும் அனுதாபச் செய்திகளை அனுப்பியவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.   குறிப்பாக எமது குடும்பத் தலைவரின் பிரிவுச் செய்தியை சர்வதேச ரீதியாகவும்,உள்நாட்டிலும் பகிரங்கப்படுத்த உதவிய வல்வை.கொம் இணையத்தள சேவையினருக்கும் அதன் பணிப்பாளர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

thangavel

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com