அமரர் சந்திரகுமார் தங்கவடிவேல் (சிவா) ஓராண்டு நினைவு

santhira

மலர்வு 09/05/1955                 உதிர்வு 14/11/2011

வல்வை யோகநாயகி தியேட்டர் வல்வெட்டித்துறை

டென்மார்க் கோசன்ஸ் நகரத்தை வசிப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்ற திரு. சந்திரகுமார் தங்கவடிவேல் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி இன்று 14.11.2012 அன்று அன்னாரின் டென்மார்க் கோசன்ஸ் நகர இல்லத்தில் அனுட்டிக்கப்பட்டது.
பாசமிகு தந்தையாகவும், அன்பிற் சிறந்த கணவனாகவும் வாழ்ந்த அன்னாரின் பிரிவு அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் இன்றுவரை ஆற்றமுடியாத பேரிழப்பாக இருந்து வருகிறது.
சிறந்த சமுதாய சேவையாளராகவும், விளையாட்டு வீரராகவும், தான் வாழ்ந்த நகரத்தின் மக்களுடைய அன்புக்குப் பாத்திரமானவராகவும் திகழ்ந்தவர்.

மண்ணில் உதித்த மரகத முத்தே மாணிக்கமே..
விண்ணில் தோன்றும் வெளிச்சமான விளக்கே..
கண்ணில் நின்று காணுமிடமெல்லாம் தெரிகிறாய்..
ஓராண்டு போயென்ன ஒரு யுகம் போயென்ன..
பாராண்ட மன்னவராய் பளிச்சென பவனி வந்தவரே..
நீர்வாழ்ந்த வீடின்று விளக்கின்றி கிடக்கிறது..
வேதனை போக்கிடவே விரைந்து வாரீர்..
விடையொன்று தாரீர்.. விண்ணகமே விலகி நில்
விழி நீர் துடைத்துவிட வெண்மதியே வந்திடுவாய்
அன்பு மனைவி.. ஆசைப் பிள்ளைகள்
அருமை உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி
ஆறாத் துயரோடு உங்கள் ஆசை முகம் தேடுகிறோம்…
பூவெடுத்து வைக்கிறோம் பொன் மலரடியில்..
கரை புரண்டோடும் கால வெள்ளம்
உன்காலடியில் பட்டுப் பட்டே சலசலக்கிறது…
அன்பே.. அகல்விளக்கே.. அருமையான பெருமையே
வணங்குகிறோம் உம் பொற் பாதங்களை..


பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகள்
கோசன்ஸ் – டென்மார்க் – தொலைபேசி : 82439496

santhira

santhira

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com