மரண அறிவித்தல் - திருமதி தர்மலிங்கம் ராசலட்சுமி்

rasaladsumi

மலர்வு xx.xx.19xx                உதிர்வு 19.05.2014

வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ராசலட்சுமி இன்று (19.05.2014) காலமானார்.

அன்னார் காலம்சென்ற இரத்தினசாமி சோபனவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், சரவணப்பெருமாள் தர்மலிங்கத்தின் (நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபைத் தலைவர்) அன்பு மனைவியும்,

காலம் சென்ற சிவஞானவேல் மற்றும் சண்முகதாஸ், சற்குணதாஸ் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலம் சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, மாணிக்கவாசகம் மற்றும் விநாயகமூர்த்தி, சந்திரசேகரம், காலம் சென்ற பங்கயற்செல்வி மற்றும் பவளக்கொடி, காலம்சென்ற யோகராணி (ரதி) மற்றும் சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

இளங்கோ (கனடா), பிரபாகரன், தமிழ்மாறன், கல்யாணி, சம்யுக்தா ஆகியோரின் பாசமிகு அத்தையும் பகீரதியின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.05.2014 ) மாலை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் 4.00 மணியளவில் தகனத்திற்காக ஊறணி இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ச.தர்மலிங்கம் - 0777212846
இ.சண்முகதாஸ் - 0773699179
இ.சற்குணதாஸ் - 0776841968

rasaladsumi

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com