மரண அறிவித்தல் - திரு சபாரெத்தினம் புவனேந்திரன் (லேத் மோகன்)

sellathurai

மலர்வு 23/01/1959                 உதிர்வு 21/09/2012

பருத்தித்துறை ஒடக்கரையை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சபாரெத்தினம் புவனேந்திரன் (லேத் மோகன்) அவர்கள் 21/09/2012 திகதி வெள்ளிகிழமை அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற சபாரெத்தினம் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், வல்வெட்டித்துறை தீருவில்தெருவை சேர்ந்த திருமேனிப்பிள்ளை (திருமேனிபாஸ்) பரிமளகாந்தி, காலம்சென்ற வேலும்மயிலும் (சின்னக்கிளி) ராசமணி தம்பதிகளின் அருமை மருமகனும், நாகேஸ்வரி (சின்னா) அவர்களின் அன்புக்கணவரும், நிருஷாந்த் (நிச்சு) அவர்களின் பாசமிகு தந்தையும், காலம்சென்றவர்களான ராஜேஸ்வரி, சற்குணராஜா, ரவீந்திரன் , ரத்தினகலா, சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரரும், தேவராசா (பருத்தித்துறை), சந்திரலிங்கம் (துரைச்சி) (பருத்தித்துறை), தம்பிஐயா R.D.A (திருகோணமலை), ரதிதேவி (மட்டக்களப்பு), காலம்சென்ற பவானி தவராசா, தேவமனோஹரி (ராணி), சிவகுமார் (பவுண்), பத்மகுமார் (பத்தினி), சாந்தகுமாரி (சாந்தி), வசந்தகுமாரி (வசந்தி), சசிகுமாரி (சசி), ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் 23/09/2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 அளவில் இல:107, திருமால் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
மனைவி நாகேஸ்வரி (சின்னா)
மகன் நிருஷாந்த் (நிச்சு) - London
107, திருமால் வீதி
திருகோணமலை
தொலைபேசி – 00 94 262 224847

 

puvan

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com