1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் மங்கயற்கரசி வல்லிபுரம் (அம்மங்கிளி, சக்கரையக்கா)
மலர்வு 17.09.1945 மறைவு 24.02.2015
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மங்கையற்கரசி வல்லிபுரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திரைகடல் ஓடி திரவியம் தேடுக!
என்ற சொல்லுக்கு இணையாக
கப்பல் ஓட்டிய பரம்பரையில் வந்துதித்த
எம் அருமை அம்மா!
எமைவிட்டு எங்கு சென்றீரோ?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறைந்து ஓராண்டானாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்...
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில் சென்றது ஏன்?
நிஜம் தானா என்று நினைக்கும்
முன்னே மறைந்து விட்டீர்கள்
தங்களை கனவுதனில் காணும் போது
நிஜத்தில் காணமுடியாதா
என ஏங்குகின்றோம்!
உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
உத்தம அழகுடைய அம்மாவே!
கள்ளச்சிரிப்பால் கருமங்களை சிரமமின்றி முடிப்பவளே
உடலோடு உயிரையும் குடும்பத்திற்கு அர்ப்பணித்து
திடமான இடமொன்றை தடம் பதித்து
கட்டிய கணவனை உயிருக்கு உயிராய் நேசித்து
தப்பில்லா பிள்ளைகளை தகமையுடன் வாழவைத்து
ஒப்பரிய பணிகளைச் செய்த
ஒப்பரிய தாயே எமைவிட்டுச் சென்றதெங்கே?
கட்டிய கணவனின் கண்ணீர் துடைக்க
கதறிடும் பிள்ளைகளைக் கட்டியணைக்க
உருகிடும் உறவுகளின் உள்ளம் தேற்ற
உத்தமியே நீர் உயிர் பெற்று வாருமம்மா
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னையின் பிரிவால் வாடும்
கணவர், பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்
அன்னாரின் நினைவஞ்சலி பிரார்த்தனை 13-01-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 59,
A-2 MG Apartments,
TMM Street,
Vanandurai,
Chennai- 600041.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: இந்தியா +914424521220