31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் - திருமதி கெங்கநாயகி உமாபதிராஜா
மலர்வு 09/04/1925 உதிர்வு 27/07/2013
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை காவற்கோட்டை கல்ரோட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கெங்கநாயகி உமாபதிராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் முப்பத்தொன்று ஆனாலும் ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திய எம் அன்னையே - உம்மை ஆயுள் உள்ளவரை நாம் மறவோம். உமது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.
எமது தாயாரின் அனுதாபச் செய்தி அறிந்து நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தொலைபேசி அழைப்பின் மூலம் எங்கள் துயரத்தில் பங்கு கொண்டு இறுதிவரை பல வழிகளிலும் உதவிகளைச் செய்து எமக்கு பக்கபலமாக இருந்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வசுந்தரம் (மகன்) - இலங்கை +94214906422 / +94771777585