jeevadass

வல்வை நெடியகாடு மக்களின் அஞ்சலி!......

கடல்கடந்து தொழில்செய்து
சாதனைகள் பலபுரிந்து
உழைப்பால் ஊரையும்
உரம்போட்டு வளர்த்திருந்தோம்

.
.
சிறப்பு மிக்க   வல்வைபுரம்
ஞானதெணி    வீதியிலே
சிறந்ததொரு   குடும்பமாம் - தந்தை
காத்தாமுத்து   இல்லமாம்

.
.
அவர்வழியில்    பிள்ளைகளும்
அருமையுடன்    வளர்ந்தார்கள்
அவர்க்கு       நிகராக
அடக்கமுடன்    உயர்ந்தார்கள்
.

.
.
உதைக்கின்ற    பந்துகூட
உனைக்கண்டு   மிரண்டோடும்
உதைபந்து     வீரனென்று
ஊரேயுனைப்    பாராட்டும்
.

.
.
ஜீவண்ணா    என்றும்மை
அன்போடு    அழைத்திருந்தோம்
ஏனண்ணா    எமைப்பிரிந்து
இடைவழியில்  நீசென்றாய்
.

.
.
எப்போதும்    கலகலப்பாய்
உறவாடும்    அண்ணாவே
இப்போது    காலனுடன்
உனக்கென்ன   தகராறு
.

.
.
நெடியகாட்டு   இளைஞரெல்லாம்
நினைவிழந்து   சோர்ந்தார்கள்
கொடியதுந்தன்   செய்திகேட்டு – கண்
குளமாகிப்     போனார்கள்
.

.
.
வாழ்விழந்த    வாசுகியும் - உன்
வம்சத்து      விளக்குகளும்
நாள்முழுதும்   மறக்குமோண்ணா
நாயகனே     உன்முகத்தைு
.

.
.
அண்ணாஉன்     ஆத்மா
அழகுடனே    சாந்திபெற
வன்னிமர    வினாயகனை
வேண்டிநிதம்   தொழுதிடுவோம்
.

 

.
.
காலத்திற்கு காலம்
வல்வைத்தாய்    ஈன்றவர்கள்
காலம்கடந்தும்    வாழ்ந்தார்கள்
ஞாலமெங்கும்     புகழோடு

.
.
கட்டிடக்    கலையினிலே
கவிவரையும்   வல்லுனர் - அவர்
தொட்டதெல்லாம்  பொன்னாகும்
தூயநல்    தொழிலதிபர்
.

.
.
தந்தைபெற்ற    பிள்ளைகளில்
ஜீவண்ணா      உனைத்தேடி
சிந்தையது      கலங்கிநின்று
தரணியெங்கும்   தேடுகின்றோம்
.

.
.
புகழ்மாலை    பூமாலை
பெற்றதுநீ    போதாதா - இன்று
மலர்மாலை   கேட்டுஎமை
வருத்தியது    காணாதா
.

.
.
புதினைந்து    வருடங்கள்
புழக்கப்பட்ட   பாதையிலே - இன்று
புலனைந்தும்   அடங்கியது
புரியாத      புதிராகும்
.

.
.
ரஞ்சண்ணா    புலம்புவதும்
அண்ணிதினம்   கலங்குவதும்
கொஞ்சமேனும்   கேட்குதோண்ணா
வஞ்சமில்லா  நல்லவனே
.

.
.
அன்னையவள்     இருந்திருந்தால்
அணுஅணுவாய்த்   துடித்திருப்பாள்
முன்னர்பின்னர்    யோசித்தா – உன்
முடிவுரையை     நீவரைந்தாய்
.

.
.
சிரித்தஉன்    முகம்பார்த்தால்
சித்திரமும்    கதைபேசும் - வலை
விரித்த      காலன்தான்
வஞ்சகமாய்   நடந்துவிட்டான்
.

.

.

அன்போடுவாழ்ந்த ஜீவனின் பிரிவால்
துயருரும் வல்வை நெடியகாடு மக்கள்
25/05/2013
வல்வை நெடியகாடு

 

 

  

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com