கடமைக்கு போனவனை காலன்
அழைப்பது
கண்கட்டிய நீதிதேவதையின் பெரும்
குற்றமல்லவா.
வானத்தில் இருக்கும் தேவர்களே
எழுந்துவாருங்கள்
வையகத்தில் நீங்கள் செய்வதென
வாய்திறந்து கூறுங்கள்!.....
மனிதஉரிமை மீறுவது மனிதர்
மட்டுமா?
வானவர் உங்களதும் அத்துமீறல்
அல்லவா!
போர்நடக்கும் பூமியிலே இறப்பு
சகஜம்தான்
பிழைக்கவந்த பூமியிலே இந்தஇழப்பு
நியாயமா?.....
ஜீவனைப் பிரிந்துவிட்டால் மனிதன்
வாழலாமா?
ஜீவதாஸை பிரித்து இனி மனிதம்
வாழுமா?
மனிதம் நிரம்பிவாழ்ந்த எங்கள்
மாமனிதனை இழந்தோம்
மண்ணில்இனி மனிதரைத்தேடி எங்கு
நாங்கள் போவோம்!.....
கோவில் கொண்ட தெய்வங்களே
வெங்கொடுமை செய்தீர்கள்
கோமகனைப் பிரித்து நல்லகுடும்ப
வாழ்வை அழித்தீர்கள்
வழியினிலே காலன் நின்று
கையக்காட்டினால்
காவல்நிற்கும் தெய்வங்களே அங்கே
என்னசெய்தீர்கள்!.....
உள்ளத்திலே படுவதையே உதட்டால்
சொல்பவன்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசமறுப்பவன்
எப்பொழுதும் எவரிடத்தும் அன்பு
கொள்பவன்-பிறர்
துன்பம்கண்டு தன்மனதில் நொந்து
கொள்பவன்!.....
வல்வையன் என்பதிலே பெருமை
பட்டவன்-வந்த
இடத்திலும் அதற்காக களம்
புகுந்தவன்
வாழும்போது சூழநின்று சிரிக்க
வைப்பவன்
கொள்ளைபோனான்!.. தெய்வங்களே
அழுகுரல்கள் கேட்குதா?... |
வீதியிலே போவோரை நீங்கள்
நீங்கள் அழைப்பதும்
விதியென்று சொல்லியிதை மக்கள்
மறப்பதும்
காலம்காலமாக இந்த காட்சி
நடப்பதும்
கல்லாய்ப்போன தெய்வங்களே
கருணையில்லையா?.....
சாட்சிசொல்ல யாருமின்றி மனித
சாவுநடக்கையில்
கோர்ட்டில்ஏறி கூண்டில்நின்று
யார் சாட்சிசொல்வது?
சாத்தானை றோட்டில்விட்டு நீங்கள்
ஓடிப்போனாலும்-இந்த
சாவுக்கு நீங்கள்தான் சாட்சாத்
குற்றவாளிகள்!.....
மனிதர்களை ஏய்த்துவாழும் மமதை
மமதைகொண்டீர்கள்
மண்ணில்வாழ்ந்த ஒரேயொரு
மனிதனையும் பறித்துக்கொண்டீர்கள்
கலியுகத்தில் இவைகள் எல்லாம்
சகஜமாகலாம்-ஆதலால்
தேவலோகத்தில் ஜீவதாஸிற்கு
கோயில்கட்டுங்கள்!.....
காத்தாமுத்துவும் தாய் நாகரத்தினமும்
தந்துசென்றார்கள்
ஜீவன்கோவிலிற்கு அவர்களையே
காவல் ஆக்குங்கள்.
அன்னையும் தந்தையுமே பிள்ளைகட்கு
நல்லகாவல்
ஆண்டவனே உன்னைநம்பி நாங்கள்
போனோம் மோசம்!.....
உங்களையே நம்பிஇனி நாங்கள்
கைகள் தொழலாமா?
உலகத்திற்கு இனியென்றாலும்
உண்மை கூறுங்கள்.
ஜீவாண்ணாவை போலநீங்கள்
வாழப்பழகுங்கள்-அவர்போல்
உலகிலுள்ள ஜீவன்களிற்கு-இன்மேல்
கருணைகாட்டுங்கள்!......
முள்ளிவாய்கால் ஓரத்திலே எங்கள்
கொள்கைகொண்டீர்கள்
மிட்லாண்ட் போகையிலே நல்ல
ஜீவனைக்கொன்றீர்கள்
மேல்லச்சாகும் தமிழென்று யார்
யாரோசொன்னார்கள்
தெய்வங்களே உங்களையும் யாரோ
சபிக்கப்போறார்கள்!..... |