எங்கள் தோழனே சிவஞானதாஸ்
தோற்றம்: 28/12/1966 மறைவு: 29/04/2012
எங்கள் தோழனே சிவஞானதாஸ்
அன்புக்கினிய தோளா உன் புன் சிரிப்பும் பிறர் நலம் பேணலும்
என்றும் எமைவிட்டு நீங்கா நின் நிளலடிகள்
உறவுறு சுற்றம் தனில் நிறைவுற நின்றவனே
கருவுறு கர்மங்கள் யாவும் நிறைவுற செய்தவனே
நிறைவேறா கர்மங்கள் இன்னும் நிறைந்திடா போதினிலே
நிறைவுற்ற நாட்களோடு முடிவுரை எழுதிவிட்டு எங்கு நீ சென்றாய்
பட்டமரம் வீழ்ந்து பத்தி எரியலாம் பச்சை மரம் நீ
இட்ட பணி இன்னும் இருக்கையிலே சுட்டுவிடும் தீயின் பசிக்கு கொடுத்துவிட்டாய் உன் உடலை
வற்றா விழிகளும் வற்றிபோனதைய்யா
வாழப்பிறந்த உன்னை வானகம் அவன் அழைத்தது கண்டு
அன்புசால் உறவே உன் பிரிவில் மாளா துயருறும் உன் உறவுகளோடு நாமும் துயருறுகிறோம் நின்தாழ் நினைவுகளோடு.
சுவிஸ் வாழ் வல்வை மக்கள்.