மரண அறிவித்தல் திருமதி இராசமணி தேவசிகாமணி

பிறப்பு: 24.09.1941 இறப்பு: 14.07.2026
திருகோணமலையை பிறப்பிடமாகவும் வசிவிடமாகவும் கொண்ட அமரர் இராசமணி தேவசிகாமணி அவர்கள் 14.07.2026 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் .
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை காலஞ்சென்ற சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தெய்வசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், காலஞ்சென்ற குகதாஸ், காலஞ்சென்ற வள்ளிநாயகி, சுவாதியம்மா, தெய்வநாயகி, முத்துக்குமாரசுவாமி (துரைசிங்கம்), அருள்சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு சகோதரியும், ரமணி, தேவமனோகரி, சகுந்தலா, காலஞ்சென்ற சரவணபவன், சசிகலா, ராதை, அருந்ததி, காலஞ்சென்ற கெளரிசங்கர் ஆகியோரின் அன்பு தாயாரும், சண்முகராஜா, சச்சிதானந்தராஜா, சக்திவேல், மோகனதாஸ், யோகநாதன், காலஞ்சென்ற செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.07.2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 04.00 மணியளவில் இல 72 கஸ்கிசன் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு: 0262224345


