cultural

வல்வையின் கலாச்சாரம் என்று சொன்னால் அது கோவில் கலாச்சாரமும் வணிக கலாச்சாரமும் சேர்ந்த துணிச்சலான, தைரியமுள்ள, நேர்மையான, நெஞ்சுரமுள்ள, வீரமான கலாச்சரமேயாகும்.

நமது பாரம்பரிய கலாச்சாரம் எப்படியிருந்தது, கடந்த 30 வருட தொடர்ச்சியான சமூக இடைஞல்களினால் இப்ப எப்படியுள்ளது என்பதை ஆராய்வதும் ஒரு முக்கியமான செயற்பாடாகும். அதைவிட மிக முக்கியமானது எதிர்காலத்தில் எமது கலாச்சாரம் எப்படியிருக்க வேண்டும் என்பதுதான்.

எம்மை பொறுத்தவரையில் "சரித்திரம் இருந்தால்தான் சரித்திரம் படைக்கலாம்", "வரலாறு இருந்தால் தான் வரலாறு படைக்கலாம்" என்கிற இறுக்கமான நம்பிக்கையுள்ளது.

வல்வெட்டித்துறைக்கு என்று உயர்ந்த, செழிப்பான, செல்வமுள்ள, வளமான வரலாறும், பண்பாடும், கலாச்சாரமும், நாகரீகமும் உள்ளது.

நாம் அரசபடைத்தூதர்களாக, வீரபரம்பரையின் பிரதிநிதிகளாக வந்து வல்லி-வெட்டிய-துறையில் குடியேறினோம். அன்றிலிருந்து இன்றுவரை எமது வீரசாகசங்களும், அளப்பரியா சாதனைகளும் அளவுக்கடங்காதன.

ஆனால் நமது மண்ணில் இன்று எமது பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கு முகமாக சொல்லிக்கொள்ளும் வகையில் மிகையாக இல்லாதது மனவருத்தத்திற்குரியது.

பிரதேசவாதமும், பெரியவர்களை மதித்து நடக்காத தன்மைகளும், தெய்வபக்த்தியின்மையும், நாமே நமது பிரச்சனைகளை தீர்க்காமல் வெளி ஊரவர்களை அணுகுவதும் போன்றவையான தன்மைகளை எமது வல்வையிலிருந்து நாம் முளையோடு கிள்ளியெறிய வேண்டும்.

இதற்காக உங்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் எதிர்பார்கிறோம்.

பின்வரும் திட்டங்களுடன் தாய்நில மற்றும் புலம்பெயர் வல்வையர்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்.

  • கோவில்களில் பிரசங்கங்களை நிரந்தரமாக/ஒழுங்காக/வாடிக்கையாக நடாத்தல்
  • கோவில்களின் பராமரிப்பும் சீர்திருத்தங்களும் (தற்போது மக்களால் பங்களிக்கபட்டுகொண்டிருக்கிறது).
  • நாடகக்கலாமான்றங்கள் மிகுதியும் வளர்ச்சியும்
  • பரதநாட்டியமும் சங்கீதக்கலை வளர்ச்சியும்
  • கலாச்சார சம்பதமான பட்டிமன்றங்கள் வைத்தல்
  • இளைஞர்களுக்கான, சிறார்களுக்கான பெற்றோர்/பெரியார்களின் மதிப்பு/தகுதி பற்றிய பணிமனை, பயிலரங்கு வைத்தல்
  • குடுபங்களிற்கிடையேயான - ஒருங்கிணைவான இணைகுழு வேலை, முயற்சி (team building events)
  • நண்பர்களிற்கிடையேயான - ஒருங்கிணைவான இணைகுழு வேலை, முயற்சி (team building events)
  • வல்வெட்டித்துறையின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கங்களும் பட்டிமன்றங்களும் வைத்தல்
  • வல்வையின் கலாச்சாரம் சம்பந்தமான ஆவணக்காப்பகம் உருவாக்குதல்

மேற்கூறியவகைகள் எல்லாம் வல்வையர்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால்தான் சாத்தியமாகும்

culture

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com