மரண அறிவித்தல்: திரு கிருஷ்ணசாமி ஶ்ரீரங்கநாதன்

பிறப்பு: 24/10/1938              இறப்பு: 08/04/2020

வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை சார்ந்தவரும், வெலிங்டன் நியூசிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி ஶ்ரீரங்கநாதன் அவர்கள் 8/4/20 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி, கனகசவுந்தரி தம்பதியினரின் அன்பு மகனும் சரோஜினிதேவியின் அன்பு கணவரும் காலம் சென்ற பாலசிங்கம் ஞானகலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னார் வாசுகி (அவுஸ்திரேலியா), வளர்மதி (நியூசிலாந்து), குமரன் (நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஶ்ரீதர் (அவுஸ்திரேலியா), பிலிப் (நியூசிலாந்து), ஹிமாலயா (நியூசிலாந்து) ஆகியோரின் மாமனாரும், ஆதவன், யாழினி, அருணன், பிருந்தன், ஆர்வன், காவியன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னார் காலம்சென்ற யோகாம்பிகை காலம்சென்ற பாலாம்பிகை காலம்சென்ற கோபாலசாமி, ராமநாதன், அருளானந்தசாமி, பத்மநாதன், காலம்சென்ற ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.

தொடர்புகளிற்கு:
வாசுகி - +61 422 111 812
வளர்மதி - +64 210 810 4520
குமரன் - +64 21 445 604