இறுதிக்கிரியை அறிவித்தல்: திருமதி இரத்தினகாந்தி ஆறுமுகம்

மண்ணில்: 10.04.1932              விண்ணில்: 02.04.2020

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இரத்தினகாந்தி ஆறுமுகம் அவர்கள் 02.04.2020 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னாரது பூதவுடல் 20.04.2020 திங்கள் அன்று மதியம் 01.30 மணிக்கு Mitcham Road, London CR9 3AT முகவரியில் அமைந்துள்ள Croydon Crematorium East Chapel இல் இறுதிக்கிரியைகளுடன் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போதைய இடர்காலநிலையில் அரச கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அன்னாரது குடும்ப உறவினர்களுடன் மேற்படி இறுதிக்கிரியையுடனான தகனம் நடைபெறும்.

எமது குடும்பத்தலைவியான அம்மாவினது இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு ஆறுதல் செய்திகளை தொலைபேசி மூலமாகவும் சமூக வலைத் தளங்கள் ஊடாகவும் தெரிவித்து எமது துயரத்தில் பங்கெடுத்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள், போன்ற அனைத்து நல்உள்ளங்களிற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ் இடர்காலத்தில் அம்மாவினது  துயரச்செய்தியை இணைய, சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து துயரத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் எமது நன்றி.

தகவல்: குடும்பத்தினர்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இறைவனடி சேர்ந்த செய்தி

திருமதி இரத்தினகாந்தி ஆறுமுகம்
வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இரத்தினகாந்தி ஆறுமுகம் அவர்கள் 02.04.2020 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் வல்வெட்டித்துறை காட்டுவளவைச் சேர்ந்த காலஞ்சென்ற சரவணப்பெருமாள் ஆறுமுகம் (ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சொர்க்கலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சரவணப்பெருமாள் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

இவர் காலஞ்சென்ற உதயகுமார், ராஜ்குமார்(UK), கிருஸ்ணகுமார்(UK), ராதிகா(Australia), பிறேம்குமார் (UK), சிவகுமார்(UK), மேனகா(Canada) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஜெயலக்சுமி, இந்துமதி, றஜனி, Dr மோகன்( Australia), யோகேஸ்வரி, குமுதினி, முரளிதரன்(Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற விஜயமோகன், விஜி, விவேகினி, Dr கௌதம், பிரகாஷ், கோகுலன், ஆகாஷ், ஓவியா, கீர்த்தனா, சஞ்ஜெய், இலக்கியா, அஷ்யன் ஆகியோரின் அன்புப்பேத்தியாரும் ஆவார்.

இவர் காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் அம்பிகாவதி, ஐயாத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான சத்தியமூர்த்தி, வினாயகமூர்த்தி, பங்கையற்செல்வம், மாணிக்கவாசகம், தர்மலிங்கம் மற்றும் பவளக்கொடி, சந்திரசேகரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

தகவல் : குடும்பத்தினர்;
திரு பிறேம்குமார் UK - 020 8683 2439 ஃ 075 5702 0102 
திரு ராஜ்குமார் UK - 079 5677 2711               
திரு கிருஸ்ணகுமார் UK - 079 3011 8787                                               
திரு சிவகுமார்  UK - 079 9075 0539
Dr மோகன்  &  திருமதி ராதிகா மோகன் Australia                                     
திரு முரளிதரன் & திருமதி மேனகா முரளிதரன் Canada