மரண அறிவித்தல்: திரு. கிருஷ்ணசாமி இராமநாதன்

KRamanathan

பிறப்பு: 20 /10 /1936             இறப்பு: 02/07/2020

வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை சார்ந்தவரும், யாங்கோன் (ரங்கூன்), மியான்மர் (பர்மாவை) பிறப்பிடமாகவும், நியூஸிலாந்து, வெலிங்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணசாமி இராமநாதன் அவர்கள் 02.07.2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி, கனகசவுந்தரி தம்பதியினரின் அன்பு மகனும், பாரததேவியின்(பாரு) கணவரும், காலம் சென்ற நாராயணசாமி, மஹாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் கௌரி (சிங்கப்பூர்), கிருஷ்ணன் (கனடா), பாகீரதி (நியூஸிலாந்து), அரிகரன் (நியூஸிலாந்து), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேசன்(சிங்கப்பூர்), கரோலின்(கனடா), காலம்சென்ற டேவிட் (நியூஸிலாந்து), ட்ரேசி (நியூஸிலாந்து) ஆகியோரின் மாமனாரும், காயத்திரி, கோகுலன், வித்தியா, ஜஷ்மின், சவானா, குயின்தன், ஈவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னார் காலம்சென்ற யோகாம்பிகை, காலம்சென்ற பாலாம்பிகை, காலம்சென்ற கோபாலசாமி, காலம்சென்ற ஸ்ரீரங்கநாதன், அருளானந்தசாமி, பத்மநாதன், காலம்சென்ற ஜெயலட்சுஷ்மி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி மற்றும் பிள்ளைகள்

KRamanathan